ரகு; மதுமிதா; ரத்னா; ராதா கிருஷ்ணன் இப்படி நான்கு முக்கிய கதாபாத்திரங்களை மட்டும் வைத்து வாழ்க்கைக்குத் தேவையான பல பாடங்களை சொல்லித்தருகிறார் எழுத்தாளர் சுஜாதா. காதல் ஏற்படுத்தும் சுகம்; வலி; விழிப்புணர்வு; விபரீத முடிவு என அனைத்துத் தளத்தையும் காட்சிப்படுத்தியிருப்பது நாவலுக்கு கூடுதல் பலம். பெண்கள் எடுக்கும் எல்லா முடிவுகளுக்கும் அவர்கள் காரணமல்ல என்றும்; வெள்ளந்தியான பெண்களை ஆண்கள் எப்படியெல்லாம் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதும் இந்தக் கதையில் இயல்பாக பதியவைக்கப்பட்டிருக்கிறது. நம் தேசத்தில் இருந்து அயல் நாட்டிற்கு குடியேற விரும்புகிறவர்கள் இருப்பதுபோல தாய் நாட்டிற்கு திரும்ப முடியாமல் தவிக்கும் நிலையில் அங்கே ஏராளமானோர் இருக்கிறார்கள் என்பதை சொல்லியிருக்கும் எழுத்தாளர்; அவர்களின் மனங்கள் படும் பாட்டையும் பட்டியலிடுகிறார். முதல் காதல் ஏற்படுத்தும் தாக்கம் எவ்வளவு ஆழமானது என்பதை இந்த நாவலில் பல இடங்களில் காண முடிகிறது.
Medium: Audio Books
Bildformat:
Studio: Storyside IN
Erscheinungsdatum: